Saturday, 5 July 2008

சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள்

கடலூர், ஜுலை. 5-

சிறுபான்மையினத்தைச்சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கல்விஉதவித்தொகைகளை வழங்குகிறது.

பேட்டி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மேலாளர் ரிஸ்வான் அகமது கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை(மெரிட் ஸ்காலர்ஷிப்) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சிறுபான்மையினத்தைச்சேர்ந்த 753 மாணவ-மாணவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் கல்வி உதவித்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நாகலாந்து, திரிபுரா போன்ற மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை அந்த மாநில அரசுகள் மாணவர்களுக்கு வழங்காததால், தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்பேரில் கூடுதலாக 558 மாணவ-மாணவிகளுக்கு 11/2 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. அந்த தொகையையும் மாணவர்களுக்கு வழங்கி உள்ளோம்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கும்...

அதேப்போல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு கடந்த ஆண்டில் ஆரம்பித்தது. அந்த திட்டத்தின் கீழும் தமிழகத்துக்கு 90 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 711 மாணவ-மாணவிகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று உள்ளது. இதில் 30 சதவீதத்தொகை மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிதியின் கீழ் முதல், முதலாக கடலூர் மாவட்டத்தில் 45 மாணவ-மாணவிகளுக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கல்வி ஆண்டில் புதிதாக 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிப்பவர்களில் 15 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்த விண்ணப்பபடிவங்களை சரிபார்த்து, வகுப்பு வாரியாக, வருமானம் வாரியாக , இனம் வாரியாக தொகுக்கப்பட்ட விவரங்களை மட்டும் http://www.minorityaffairs.gov.in/ http://www.tn.gov.in/bcmbcmw/doc என்ற இணைய தள முகவரியில் உள்ள உரிய படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பரிசு

எம்.பி.பி.எஸ்., பி.இ. படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 1,869 மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு அந்த படிப்பு முழுவதும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நடப்பு ஆண்டில் மேலும் 867 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது தவிர மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், உருதுவில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் சிறப்புபரிசுகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு ரிஸ்வான் அகமது கூறினார்.

அப்போது சென்னை சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர் விக்னேசுவரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி தினத் தந்தி

Friday, 4 July 2008

ஒரு தலைவருடைய எண்ணங்கள் பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும்:மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்


ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் கேட்டால், பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும் என சொல்வேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் குலாம் மஹ்முது பனாத்வாலா அவர்களுக்கு இரங்கல் கூட்டம் புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மணிமாடத்தில் அமைந்துள்ள அரசியல் சாசன அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச்செயலாளருமான இ.அகமது தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹித் சித்தீகி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சகாபுதீன், டெல்லி பத்தேப+ர் மஸ்ஜித் இமாம் மௌலானா முஃப்தி முகர்ரம், ஜமாஅத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர் மௌலானா ஷபீர் முனீஸ், அஹ்லே ஹதீஸ் ஜமாஅததி;ன் சார்பில் மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி, நாடாளுமன்ற மக்களவை செயலாளர் பி.டி.ஆச்சாரி, டெல்லி பிரதேஷ் முஸ்லிம் லீக் தலைவர் மர்கூப் ஹூசைன் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சார்பில் பேராசிரியர் ரியாஸ் உமர், ~இக்னோ~ அமைப்பின் துணைவேந்தர் டாக்டர் பஷீர் அகமத்கான் ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் பனாத்வாலா ஸாஹிபின் தன்னலமற்ற சமூக சேவையையும், சிறுபான்மை சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளையும், நாடாளுமன்றத்தில் அவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவு கூர்ந்தனர்.

மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது பேசும்போது, கடந்த ஒருவாரமாக நான் தனிமையில் வாடுவதாக உணருகிறேன்... மகத்தான தலைவர் பனாத்வாலா ஸாஹிப் என குறிப்பிட்டார்.

மத்தியகனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியான பனாத்வாலாவின் தியாகங்கள் போற்றத்தக்கவை என புகழஞ்சலி செலுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

பனாத்வாலா ஸாஹிப் என்னோடு கொண்டிருந்த தொடர்பு நீண்ட நாட்களுக்குரியது. மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நானும், அவரும் ஒரே சமயத்தில் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டோம்... சட்டமன்றத்திலேயே அவரது செயல்பாடு சிறப்பானது.

அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது நான் சபாநாயகராக இருந்தேன். அவரை மதிப்பிற்குரிய ஒரு நாடாளுமன்றவாதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும்@ ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் யாராவது கேட்டால் தயக்கமின்றி பதில் சொல்வேன் பனாத்வாலாவைப் போல் இருக்க வேண்டுமென்று! அந்த அளவிற்கு உதாரண புருஷராக திகழ்ந்தவர் அவர்...

இவ்வாறு சிவராஜ் பாட்டீல் குறிப்பிட்டார்.
இறுதியில் மறைந்த மாபெரும் தலைவரின் மறு உலக நன்மைக்கு பிராத்தனை செய்யப்பட்டது.



Thanks IUML website

Thursday, 3 July 2008

முஸ்லிம்களின் புதிய அரசியல் கட்சியின் பாடல்கள் வெளியீடு

தமிழகத்தில் இஸ்லாமியர்களால் புதிதாக துவக்கப்பட்டு வழர்ந்து வரும் அரசியல் கட்சியான இந்திய தேசிய மக்கள் கட்சியினர் தங்கள் கொள்கைகளை விளக்கும் கொள்கைப் பாடல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்களை கேட்பதற்கு அல்லது பதிவிரக்கம் செய்வதற்கு :
.

Saturday, 28 June 2008

பிரிட்டனில் படிக்கும் இந்திய மாணவர்கள் 2 ஆண்டுகள் பணிபுரியலாம்

பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள், 2 ஆண்டுகள் அங்கு தங்கி பணிபுரியலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரிட்டன் அதிகாரிகள் கூறுகையில், பிரிட்டனில் கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பை முடித்த பின்னரும், அங்கு, தங்களுக்கான வேலையை தேடிக்கொள்ளும் பட்சத்தில், இரண்டு ஆண்டுகள் வரை, பிரிட்டனில் தங்கி பணியாற்றலாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே, ஓர் ஆண்டு மட்டும் அங்கு பணிபுரிவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய, தற்போது சிறப்பு அனுமதிபெறத் தேவையில்லை என்றும், 2007 ஆம் ஆண்டில் மட்டும் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பிரிட்டனில் படிப்பதற்காக விசா பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் மாணவர்கள் பணிபுரிவதற்காக மேலும் 3 புதிய திட்டங்களையும் பிரிட்டன் அறிவித்துள்ளது இந்திய மாணவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Friday, 27 June 2008

லால்பேட்டையில் புனிதமிகு புகாரி ஷரீப் 32 ஆம் ஆண்டு நிறைவு துஆ மஜ்லீஸ்


லால்பேட்டையில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது


லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆ பயானுக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு துஆ செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் A. அல்ஹாஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் மறைந்த தலைவரின் சேவையை நினவு கூர்ந்து துஆ செய்தார்கள் இதில் ஆயிரக்கணக்கனோர் பங்கேற்று அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.


மெயின்ரோடு பள்ளிவாசலில் துஆ செய்யப்பட்டது....


லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மொளலவி முப்தி, S.A. அப்துர் ரப் ஹஜ்ரத். ஜாமிஆ ம்ன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் அல்ஹாஜ், A. நூருல் அமீன் ஹஜ்ரத். பேராசிரியர் அப்துல் அலி ஹஜ்ரத். மவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் S.A.அப்துல் கப்பார். நகர தலைவர் அல்ஹாஜ், K.A.முஹம்மது. செயலாளர் M.H.முஹம்மது ஆசிப். பொருலாளர்,A.M. ஜாபர். மாநில மாணவர் அணி அமைப்பாளர் A.S. அப்துல் ரஹ்மான். நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அப்துல் காதர். முஹம்மது பாருக். மஸ்ஊத் அஹ்மத். முஹம்மது தையூப். மர்ஜுக் அஹ்மத். மற்றும் ஜமத்தர்கள் கலந்துக்கொன்டு மறைந்த தலைவரின் சேவையை நினவு கூர்ந்து அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.